
மதுரை
இன்று கட்சியை தொடங்கிய கமலஹாசன் தனது கொடியை அறிமுகப்படுத்தி விளக்கம் அளித்துள்ளார்.
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியில் வெள்ளை நிறத்தில் சிவப்பும் வெள்ளையுமாய் ஆறு கரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி அமைந்துள்ளது. நடுவில் கறுப்பு நிறத்தினுள் வெண்மை நட்சத்திரம் அமைந்துள்ளது. இது குறித்து கமலஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர், “தென் இந்தியாவின் வரைபடத்தை எனது கட்சிக் கொடியில் காணலாம். கொடியில் உள்ள ஆறு கரங்களும் ஆறு மாநிலத்தை குறிக்கின்றன. நட்சத்திரம் மக்களை குறிக்கிறது. எனது கட்சி மக்களுக்கான நீதியை மையமாக கொண்டு செயல் பட உள்ளது. நீதிக்கட்சி உட்பட பல கட்சிகளின் கொள்கைகள் எனது கட்சிக் கொள்கையில் இடம் பெறும்” என தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel