மதுரை:
தமிழகத்தில் தற்போது நேர்மையான அரசியல் கட்சி உருவாகி உள்ளது என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்து வைத்தார். இந்த பொதுக்கூட்டத்தில் டில்லி முதல்வரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
“கமல் நேர்மையானவர் மட்டுமல்ல.. துணிச்சாலனவரும்கூட. மக்களுக்கு பள்ளிகள், மருத்துவமனைகள் வேண்டும் என்றால் கமலஹாசனை ஆதரியுங்கள்.
தமிழகத்தில் தற்போது நேர்மையான அரசியல் கட்சி உருவாகி இருக்கிறது.
அதிமுக, திமுக என்ற இரு கட்சிகளுக்கு இடையே தமிழகம் சிக்கி தவிக்கிறது. ஊழல் வேண்டும் என்றால் திமுக, அதிமுகவை ஆதரியுங்கள்.
நேர்மையான அரசு இருந்தால் எல்லாம், சாத்தியம்தான்.
சிறந்த நடிகரான கமலை உண்மையான ஹீரோவாக பார்க்கிறேன். கமல் யதார்த்த வாழ்க்கையின் கதாநாயகனாக திகழ்கிறார்.
திரைப்படத்தில் அவருக்கு ரசிகனாக இருந்த நான், அவரது நிஜவாழ்க்கையிலும் ரசிகனாக ஆகிவிட்டேன். ஊழலுக்கு எதிராக ஒன்றிணைந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்.
கமல்,கறைபடியாத கரமுடையவர்.
டில்லியில் நேர்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சாதனையை தமிழகத்தில் கமல் செய்து முடிப்பார்” என்று கெஜ்ரிவால் பேசினார்.