
மதுரை
கமலஹாசன் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை இன்று மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடந்த கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.
முன்பே அறிவித்தபடி இன்று ராமேஸ்வரம் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து காலையில் தனது அரசியல் பயனத்தை நடிகர் கமலஹாசன் தொடங்கினார். அத்துடன் அப்துல் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்

இன்று மாலை மதுரை ஒத்தக்கடையில் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அவரது கட்சியின் பெயராக மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரை அறிவித்தார்.
அவரது கட்சிக் கொடி சிவப்பும், வெள்ளையுமாய் 6 கைகள் இணைந்த கரங்களாய்… நடுவில் கருப்பு நிறத்தில் வெண்மை நட்சத்திரம்… சுற்றுப்பகுதி முழுதும் வெள்ளை நிறம் ஆக அமைக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel