
கமலாப்பூர்
உத்திரப் பிரதேசத்தில் மோடி தொடங்கி வைத்த முதலீட்டாளர் மாநாட்டுக்கு சென்றுக் கொண்டிருந்த சட்டப்பெரவை உறுப்பினர் கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் முதலீட்டாளர் மாநாட்டை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த் மாநாட்டில் கலந்துக் கொள்ள பிஜனோர் மாவட்டத்தில் உள்ள நூர்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லோகேந்திர சிங் காரில் சென்றுள்ளார். அவருடன் ஓட்டுனரும் இரு பாதுகாவ்லர்களும் சென்றுள்ளனர்.
அந்தக் கார் கமலாப்பூர் அருகே சென்றுக் கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதனால் சாலையின் மறுபுறத்தில் வந்த டிரக்குடன் மோதியது. சம்பவ இடத்திலேயே லோகேந்திர சிங், அவரது பாதுகாவலர்கள் மற்றும் அந்த டிரக்கின் கிளீனர் ஆகியோர் மரணம் அடைந்தனர். கார் மற்றும் டிரக் ஓட்டுனர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]