டில்லி:

டில்லி அரசு தலைமை செயலாளர் அன்ஷூ பிரகாசை தாக்கியதாக கூறப்பட்ட புகாரின் பேரில்  ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கத்தின் விளம்பர செலவு அதிகரித்து வருவது தொடர்பாக கடந்த 19ந்தேதி நேற்று இரவு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தலைமை செயலாளருக்கும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து இரு எம்எல்ஏக்கள் தலைமை செயலாளர் அன்ஷூ பிரகாசை கெஜ்ரிவால் முன்னிலையில் பிரகாஷ் ஜர்வால் மற்றும் அமானத்துல்லா கான்  தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கிருந்து சென்ற தலைமை செயலாளர். நேராக கவர்னர் மாளிகை சென்றார். அங்கு கவர்னர் அனில் பைஜாலிடம் புகார் கொடுத்துள்ளார். தன்னை தாக்கிய எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியதாக கூறப்பட்டது.

இந்கிநலையில், தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் கொடுத்த புகாரை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ- வும், பிரகாஷ் ஜார்வால் மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார், அவரைக் கைது செய்து, சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமைச் செயலரைத் தாக்கிய சம்பவத்தில் தொடர்புடையதாக சொல்லப்படும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆலோசகர் வி.கே.ஜெயின் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.