சென்னை:

யிர் காப்பீட்டு தொகை வழங்க மறுத்து வரும் ஐசிசிஐ வங்கியின் காப்பீட்டு நிறுவனமான ஐசிசிஐ லொம்பார்டு நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழகத்தில் விவசாயிகள் பயிர்களை பாதுகாக்க காப்பீடு திட்டத்தில் இணையவேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஏற்கனவே பயிர் காப்பீட்டில் இணைந்த விவசாயிகளுக்கு, வழங்கப்பட வேண்டிய காப்பீட்டு தொகையை வழங்காமல் வங்கிகள் இழுத்தடித்து வருகின்றன.

இந்நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய காப்பீட்டு தொகையை வழங்காமல் ஐசிசிஐ வங்கியின் காப்பீட்டு நிறுவனமான ஐசிசிஐ லொம்பார்டு நிறுவனம் இழுத்தடித்து ஏமாற்றி வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள ஐசிசிஐ லொம்பார்டு நிறுவனம் முன்பு விவசாயிகள் மாபெரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையான காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரான கே.பி.இளங்கோவன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.