ர்மபுரி

ர்னாடகாவின் கபினி அணையிலிருந்து திடீரென தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால்,  தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது.

இந்த மாதம் 16ஆம் தேதி காவிரி நீர் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.   அதில் தமிழ்நாட்டுக்கு 177.25 டி எம் சி நீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.   கர்னாடகாவுக்கு 14.75 டி எம் சி அளவுக்கு அதிகமான நீர் பங்கீடு செயப்பட்டது.   அத்துடன் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்கவும் ஆணையிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் இன்னும் 15ஆண்டுகளுக்கு இது செல்லுபடியாகும் எனவும் மேல் முறையீடு செய்ய முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.    அதை அடுத்து கர்னாடகா மாநில அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக  தெரிய வந்துள்ளது.  நேற்று காலை 300 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் அது படிப்படியாக உயர்ந்துள்ளது.   இன்று காலை 7 மணி நிலவரப்படி 1200 கன அடி நீர் வந்துக் கொண்டு இருக்கிறது.   இதனால் தமிழக மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.