சென்னை:
நாளை முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்கும் கமல் நாளை இரவு மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துகிறார். இந்த கூட்டத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலுக்கு வருவதாக அறிவித்த கமல், ஊழலுக்கு எதிரானவர்களுடன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடுகிறார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை நாளை தொடங்கும் கமல் தனது கட்சி பெயர் மற்றும் கொள்கை குறித்து நாளை அறிவிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து தென் மாவட்டங்களில் முதல்கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நாளை கட்சி அறிவிப்பு வெளியிடும் கமல், நாளை மாலை மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் ஊழலுக்கு எதிரான அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் அதிகாரிகள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இதை கமல் உறுதி செய்யவில்லை.
ஏற்கனவே கடந்த ஆண்டு கமலின் ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து, பேசிய கெஜ்ரிவால், தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது கெஜ்ரிவால் பேசும்போது, நாங்கள் இருவரும் நாட்டில் உள்ள ஊழல் தீவிரமாக ஆலோசனை செய்தோம். நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வர வேண்டும். நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கு இதுவே சரியான நேரம். இருவரும் இணைந்து செயலாற்றுவது பற்றியும் விவாதித்தோம். இந்த சந்திப்பு மேலும் தொடர்ந்து நடைபெறும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.