கொழும்பு

லங்கையில் நேற்று உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டுஇலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டார்.   இவரை எதிர்த்து ரணில் விக்கிரம சிங்கே மற்றும் சிறிசேனா ஆகியோர் கூட்டணி அமைத்திருந்தனர்.    சிறிது காலமாக சிறிசேனா மற்றும் ரணில் இடையே கருத்து வேறுபாடு முற்றி வருகிறது.   இருவரும் அதிபர் தேர்தல் வெற்றிக்கு தாங்களே காரணம் என பேசி வருகின்றனர்.

வெகுநாட்களாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று நேற்று வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது.    340 உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து மொத்தம் 8375 உறுப்பினர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.    மொத்தம் 1.5 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் நேற்று காலை 7 மணி முதல் 4 மணி வரை வாக்குப் பதிவு நிகழ்ந்தது.

இந்த தேர்தலில் சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கே ஆகியோரின் அணிகள் மட்டுமின்றி முன்னாள் அதிபர் ராஜபக்சே அணியும் களத்தில் உள்ளது.   இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் மூவரில் யாருக்கு ஆதரவு அதிகம் என்னும் உண்மை நிலை தெரிய வரும்,

இதனால் இந்த தேர்தல் முடிவுகளை இலங்கை மட்டுமின்றி உலகெங்கும் உள்ள அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.