சென்னை,

மலஹாசனுன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் பதில் சொல்லனும் என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெ. மறைவுக்கு பிறகு தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது அதிகரித்து உள்ளது. நடிகர் கமலஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில், நடிகர் விஷால், உதயநிதி ஸ்டாலின் போன்றோரும் அரசியலுக்கு வருவதாக அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில்,  வாரஇதழ் ஒன்றில் தொடராக எழுதி வரும் நடிகர் கமலஹாசன்,  நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் எழுதி உள்ளார்.

அதில்,  ரஜினியுடன் இணைவது என்பது இப்போது எடுக்க வேண்டிய முடிவு கிடையாது. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். நானும் ரஜினியும் கூட்டணி வைப்பது தேவையா என்பது குறித்து இருவருமே யோசிக்க வேண்டும். இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் கமலின் கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், இதற்கு  காலம்தான் பதில் சொன்னணும் என்று கமல் பாணியிலேயே பதில் அளித்தார்.

மேலும், சிஸ்டம் சரியில்லை என்றால் இந்தியாவிலா அல்லது தமிழகத்திலா என்று  செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழகத்தில்தான் சிஸ்டம் சரியில்லை. தமிழகத்தில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்றார்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, பின்னர் முடிவு செய்யப்படும் என்ற ரஜினி, எந்த படம் முதலில் வெளியாகும் என்ற கேளவிக்கு,  2.0 படத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடியவில்லை என்றும், எந்த படம் முதலில் வெளியாகும் என்பது இன்னும் 2 நாட்களில் தெரியும் என்றார்.