கேப்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, 400 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவின் முதல் சாதனை விக்கெட் கீப்பராகவும், உலக அளவில் 4வது இடத்தையும் பிடித்தும் சாதனை படைத்துள்ளார்.
இது தோனி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியினர் அங்கு 1நாள் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுடனான 3வது ஒருநாள் போட்டியில் 400வது விக்கெட்டை கைப்பற்றி, இந்தியாவின் முதல் விக்கெட் கீப்பராக சாதனை படைத்துள்ளார். அவருக்கு அணியின் சக வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் உலகம் முழுவதும் உள்ள தோனியின் ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நேற்று தென்னாப்பிரிகாவின் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின்போது, ஆட்டத்தின் 17வது ஓவரில், குல்தீப் யாதவின் பந்தை அடித்த தென்னாப்பிரிக்கா அணி தலைவரான மர்க்ராம் அடித்த பந்தை பிடித்து தனது 400வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.
இதன் காரணமாக 400 விக்கெட்டை கைப்பற்றிய இந்தியாவின் முதல் சாதனை வீரராக தோனி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இதுவரை 314 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள தோனி 399 விக்கெட்டுளை கைப்பற்றி யிருநதார். நேற்று தென்னாப்பிரிக்கா வீரரின் பந்தை கைப்பற்றியதன் மூலம் 400வது விக்கெட்டை கைப்பற்றிய சாதனை படைத்துள்ளார். தோனி இதுவரை விளையாடிய ஆட்டத்தின் மூலம் 105 ஸ்டம்பிங் மற்றும் 294 கேட்ச்சுகளும் பிடித்துள்ளார்.
இதன் காரணமாக, உலக அளவில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய விக்கெட் கீப்பரில் தோனி 4வது இடத்தை பிடித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கையை சேர்ந்த குமார் சங்ககார 404 மேட்சில் விக்கெட் கீப்பராக இருந்து விளையாடி, 482 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலாவது இடத்தில் உள்ளார்.
அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆதம் கில் கிறிஸ்ட் 287 ஆட்டங்களின் வாயிலாக 472 விக்கெட்டுக்களை கைப்பற்றி 2வது இடத்திலேயும்,
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மார்க் பவுச்சர் 295 ஆட்டங்களின் மூலம் 424 விக்கெட்டுகளை கைப்பற்றி 3வது இடத்திலேயும் உள்ளனர்.
தற்போது 36வயதான தோனி 4வது இடத்திற்கு வந்து சாதனை படைத்துள்ளார்.
தோனியை அடுத்து இந்திய அணியை சேர்ந்த நயன் மோங்கியா 140 ஆட்டங்களின் மூலம் 154 விக்கெட்டுககளை கைப்பற்றியுள்ளார்.
தோனி இதுவரை டெஸ்ட் மேட்ச் வாயிலாக 256 கேட்சுகளும், 38 ஸ்டம்பிங்கும், டி.20 ஆட்டத்தின் வாயிலாக 47 கேட்சும், 29 ஸ்டம்பிங்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.