டில்லி:
அரசு நிர்வாக பிரச்னை தொடர்பாக துணை ஜனாதிபதி வெங்கைய நாயுட பேச வாய்ப்புவழங்க மறுத்ததால் ராஜ்யசபாவில் இருந்து எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து வெளிநடப்பு செய்தன.
ராஜ்யசபாவில் எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் நேற்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேசினார். எதிர்கட்சி தலைவர்கள் தீவிரவாதிகள் போல் நடத்தபடுகிறார்கள். அவர்களது தொலைபேசி உரையாடல்கள் ஓட்டுக் கேட்கப்படுகிறது. சிபிஐ, அமலாக்க பிரிவை கொண்டு எதிர்கட்சி தலைவர்களை ஒடுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று ராஜ்யசபா கூடிய சில நிமிடங்களிலேயே மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா சபாநாயகருமான வெங்கைய நாயுடு தெரிவித்தார். இதற்கு எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தன.
நிறைய விஷயங்கள் விவாதிக்க வேண்டியுள்ளது. அதனால் ஒத்திவைக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. மாநிலங்களின் நலன் புறக்கணிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்கட்சிகளை எதிர்கொள்ள மத்திய அரசுக்கு எழுந்த அச்சத்தை தான் இது காட்டுகிறது என்று காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சில சிபிஐ, சிபிஎம், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
துணை ஜனாதிபதியின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் ஒன்றிணைந்து இன்றைய ராஜ்யசபா கூட்டத்தை முழுவதும் புறக்கணித்தனர். காங்கிரஸ் எம்.பி. ஆனந்த சர்மா கூறுகையில், ‘‘இது ஜனநாயக விரோத செயலாகும். ராஜ்யசபா சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் கொடுக்கப்பட்டள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்திருப்பவர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை’’ என்றார்.
சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால் பேசுகையில், ‘‘ராஜ்யசபாவை நடத்தும் முறை இது தானா?. எதிர்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. இதன் மூலம் மக்களின் குரல் ஒடுக்கப்படுகிறது. நாடாளுமன்றம் இருப்பதன் பயன் தான் என்ன?’’ என்றார்.