டில்லி:
இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்றான உத்தரகாண்ட் மாநிலத்தில் பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.
மாநில முதல்வராக திரிவேந்திரா சிங் ராவ் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு மார்ச் 18ந்தேதி முதல்வராக பொறுப்பேற்றார். அதையொட்டி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு ‘நொறுக்கு தீனிகள்’ (ஸ்நாக்ஸ்) வழங்கப்பட்டது.
இந்த வகையில் மாநில அரசுக்கு கடந்த ஆண்டு மட்டும் ரூ. 68 லட்சத்து,59 ஆயிரத்து 685 ரூபாய் செலவாகி உள்ளதாம்.
உத்தரகாண்டை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், தகவல் உரிமை பெறும் சட்டம்மூலம் இந்த தகவலை பெற்றுள்ளார். மாநில தகவல் உரிமை ஆணையம் இதுகுறித்த தகவலை அவருக்கு அளித்துள்ளது.
இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சிற்றுண்டிக்கு இவ்வளவு செலவா என மக்கள் வாயை பிளக்கிறார்கள்.