கிருஷ்ணகிரி,

கே.ஆர்.பி.அணை மதகு உடைந்ததற்கு பராமரிப்பு இல்லாததே காரணம் என்று, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், காவிரி டெல்டா பகுதி காய்ந்து போனதற்கு காரணம் மத்திய பாஜக அரசுதான் என்று குற்றம் சாட்டினார்.

மேலும், கே.ஆர்.பி அணை பராமரிப்புக்கு அரசு 2 கோடி ஒதுக்கியதாக தெரிவித்துள்ளது. ஆனால், ஆனால் முறையாக பராமரிக்காததால் அனை உடைந்தது. இதனால் 22 அடி தண்ணீர் வீணாகியதாகவும், அணையின்  மதகு அனைத்தும் புதியதாக சீரமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், காவேரியில் இருந்து வரும் நீரில்,  கர்நாடகா கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது. இதை தடுக்க முகத்துவாரத்தில் கழிவு நீர் சுற்றிகரிப்பு  நிலையம் அமைக்க வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்த ஸ்டாலின்,  இந்த குடிநீர் திட்டத்தின் வாயிலாக தண்ணீர் கிடைக்க வேண்டிய,  அங்கிநாயனபள்ளி கிராமத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், ஆனால், ஆனால் அமைச்சர் முழுமை யாக செயல்படுத்தி விட்டதாக தெரிவிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம்,  திமுக ஆட்சியின்போது கொண்டு வந்த திட்டம் என்பதால், அந்த திட்டத்தை அவசர கதியில் மாற்றி, அப்போதைய முதல்வர்  ஜெயலலிதாவால் காணொளி காட்சி மூலம் இந்த திட்டம் தொடங்கப்பட்டதாகவும, திமுக ஆட்சிக்கு வந்ததால் இந்த திட்டத்தை முழுமையாக நிறைவு செய்வோம் என்றும் கூறினார்.

காவிரி பிரச்சினை குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின்,  உச்சநீதிமன்றம் உத்தரவு படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தான் டெல்டா பகுதி பாதிக்கப்படுகிறது  காவிரி டெல்டா பகுதி காய்ந்து போனதற்கு காரணம் மத்திய பாஜக அரசு தான் என்றார்.

மேலும், யானை தாக்கி மூன்று பேர் உயிரிழந்த நிலையில் துறை அமைச்சர் அதை பற்றி கவலைபடாமல் ஆட்சியை காப்பாற்று வதில் குறியாக இருக்கிறார்.

ஆட்சியையும் கட்சியை காப்பாற்ற அரசின் நலத்திட்டங்கள் கிடைக்க அதிமுக உறுப்பினர் அட்டை அவசியம் என விஞ்ஞானி தெர்மாகோல் ராஜ் தெரிவித்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.