மும்பை

பிளிப்கார்ட் இணையதளம் மூலம் ரூ.55000 செலுத்தியவருக்கு ஐ போன் 8க்கு பதில் துணிதுவைக்கும் சோப் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இணையதளத்தின் மூலம் பொருட்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது.   அவ்வாறு விற்பனை செய்யும் இணைய தளங்கள் பல உள்ளன.   பிளிப்கார்ட்,  அமேசான் உள்ளிட்ட பல இணைய தளங்கள் இது போன்ற ஈ காமர்ஸ் துறையில் ஈடுபட்டுள்ளன.    பொதுவாக  மொபைல் போன்கள் தற்போது பெருமளவில் இணைய தளம் மூலமாகவே நடைபெறுகிறது.

மும்பைய சேர்ந்த தேப்ராஜ் மெகபூப் நாக்ரேலி என்னும் மென்பொருள் பொறியாளர் பிளிப்கார்ட் மூலம் ஐபோன் 8 ஐ வாங்கி உள்ளார்.  அதற்காக அவர் ரூ. 55000 செலுத்தி உள்ளார்.  அவருக்கு பிளிப் கார்டில் இருந்து பார்சல் வந்துள்ளது.  பிரித்து பார்த்த நாக்ரேலி பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  அந்த பார்சலில் ஐபோனுக்கு பதில் துணி துவைக்கும் சோப் இருந்துள்ளது.

மத்திய மும்பை காவல் நிலையத்தில் இது குறித்து அவர் புகார் அளித்துள்ளார்.  அவர். “எனக்கு பிளிப் கார்ட்டில் இருந்து பார்சல் வந்தது.  ஆனால் பிரித்த போது உள்ளே துணி துவைக்கும் சோப் இருந்தது. ரூ.55000 செலுத்திய எனக்கு ரூ.10 மதிப்புள்ள சோப் அளித்து பிளிப் கார்ட் ஏமாற்றி விட்டது”  எனத் தெரிவித்துள்ளார்.

பைகுல்லா காவல்துறை அதிகாரி நாக்ரேலி அளித்த  புகாரின் பேரில் பிளிப் கார்ட் நிறுவனத்தின் மீது ஏமாற்றுதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.