டில்லி
நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தகவல் அறியும் சட்ட அமைப்புக்கான நிதி சென்ற ஆண்டை விட 63% குறைக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மக்கள் அரசின் பல அரசு திட்டங்களின் தற்போதைய நிலை, அதற்கு செலவிடப்பட்ட நிதி, அரசு வழக்குகளின் தற்போதைய நிலை உட்பட பல தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும். இந்தத் துறைக்கு அரசு சென்ற வருடம் ரூ.23.61 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.
இந்த நிதியின் மூலம் இந்தத் துறை பல தகவல்கள் பற்றிய கேள்விகள் அனுப்பவும், பதில்கள் பெறவும் தேவைப்படும் தபால் மற்றும் கொரியர் செலவுகள், வீடியோ கான்ஃபரன்சிங், இதற்கான விசாரணை மையம் அளித்தல் உள்ளிட்ட பல செலவுகளை செய்து வந்தது.
இந்நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இந்தத் துறைக்கு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ரூ.8.63 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார். அதாவது சென்ற வருடம் ஒதுக்கிடு செய்யப்பட்டதை விட ரூ.14.95 கோடி (63%) குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பல சமூக ஆர்வலர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.