
சிறந்த பெண் அரசியல் தலைவர் விருதினை சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு அளித்தாக சற்றுமுன் செய்தி வெளியாகி உள்ளது. இதையடுத்து, ஐ.நா.வின் தலைமையின் கீ்ழ் இயங்கும் சர்வதேச மனித உரிமை அமைப்பு தமிழிசைக்கு வழங்கப்பட்டிருப்பதாக ஒரு கருத்து பரவியிருக்கிறது.
இந்த நிலையில் தமிழிசைக்கு விருதினை வழங்கியது, “சர்வதேச மனித உரிமை ஆணையம்தானா” அல்லது மனித உரிமை என்ற பெயரில் இயங்கி வரும் பல போலி அமைப்புகளில் ஒன்றா என்ற சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் என்பது ஆங்கிலத்தில் United Nations Commission on Human Rights. என்று அழைக்கப்படும். இது ஐ.நா. மன்றத்தின்கீழ் செயல்படக்கூடியது. இது ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.
ஆனால் தமிழிசைக்கு விருது வழங்கியிருக்கும் அமைப்பின் பெயர், international human rights organizations என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, ஐ.நா. மன்றத்தின் அமைப்பு போலவே இரண்டு பக்கமும் வளைந்த கதிர்கள் கொண்ட லோகோ வைத்துக்கொண்டிருக்கும் வேறு ஒரு அமைப்பு.
ஆகவே தமிழிசைக்கு விருது அளித்திருப்பது ஐ.நா.வின் கீழ் செயல்படும் சர்வதேச மனித உரிமை அமைப்பு அல்ல என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

தவிர தமிழிசைக்கு விருது அளித்திருக்கும் அமைப்பு, ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பை போலவே, இரண்டு பக்கமும் வளைந்த கதிர்கள் கொண்ட லோகோவை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, “இப்படி மனித உரிமை என்ற பெயரில் பல அமைப்புகள் இயங்கி வருகின்றன. அப்படியோர் அமைப்பு அளித்த விருதை பெருமையுடன் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாரே தமிழிசை” என்று சமூகவலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகிறார்கள்.
கூடுதலாக ஒரு தகவல்:
கடந்த 2015ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், “மனித உரிமை அமைப்பினை அரசுதான் நடத்த வேண்டும். தனியார் மனித உரிமைகள் என்ற பெயரில் அமைப்பு கள் நடத்தக் கூடாது” என்று குறிப்பிட்டிருக்கிறது.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி மனித உரிமை என்ற பெயரைப் பயன்படுத்தும் தனியார் அமைப்பிடமிருந்து, அகில இந்திய கட்சியின் மாநிலத்தலைவர் பெற்றிருப்பது சரிதானா என்ற கேள்வியும் எழுகிறது.
[youtube-feed feed=1]