diabetic

வாஷிங்டன்:
முன்பு சர்க்கரை நோய் தாக்கியவர்களை விரல் விட்டு எண்ணிவிடும் நிலை இருந்தது. ஆனால் காலப்போக்கில் சர்க்கரை நோய் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடும் நிலை உருவாகி  வருகிறது. இந்த தலைகீழ் மாற்றத்துக்கு உணவு பழக்க வழக்கமும், மனித வாழ்க்கை முறையின்  மாறுபாடே காரணமாக உள்ளது.
மாத்திரை, இன்சுலின் என பல வகை மருத்துவ முறைகள் வந்தாலும் இந்த நோயை கட்டுப்படுத்த  முடியவில்லை. சர்க்கரை நோய் வருவதற்கு கணைய பாதிப்பே அதிக காரணமாக உள்ளது. இந்த நோய், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்கி அழிக்கிறது. ரத்தத்தில் நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்க கணையத்தில் இருந்து உற்பத்தியாகும் இன்சுலின்களை அழிக்கிறது. இதனால் ரத்தத்தை சுத்திகரிக்க உதவும் குலுகோஸ் உற்பத்தி பாதிக்கிறது.   அதனால் மனிதனுக்கு செயற்கை கணையத்தை பொறுத்தி, அதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை  நோய் தாக்குதலை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டது. உடலுக்கு தேவையான நேரத்தில் தேவையான அளவு குலுகோஸ் உற்பத்தி செய்து விநியோகம் செய்யவும், பராமரிக்கவும் செயற்கை கணையம் வடிவமைக்க வேண்டிய சிந்தனை மருத்துவ துறைக்கு ஏற்பட்டது.
டிஜிட்டல் இன்ஜினியரிங்குடன் இணைந்து இந்த மருத்துவ செயற்கை கணையம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.
தேசிய சுகாதார மையத்தின் 12.7 மில்லியன் டாலர் நிதியுதவி மூலம் வெர்ஜினியா பல்கலை க்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் ஹார்வர்டு ஜான் ஏ. பால்சன் ஸ்கூல் ஆஃப்  இன்ஜினியரிங்கின் அப்ளெயிடு சயின்ஸ் துறையும் இணைந்து இந்த நீண்ட கால ஆராய்ச்சியை  மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 9 மையங்களில் 240 நோயாளிகளுக்கு  இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் இரண்டு, 6 மாத கால சோதனை இந்த ஆண்டு 4  கல்வி நிறுவனங்களின் பங்களிப்புடன் தொடங்கவுள்ளது.
‘‘தற்போதைய நிலவரப்படி இந்த ஆராய்ச்சி வெற்றி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. எனினும் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நோயாளியின் நீண்ட கால இயற்கை சூழலுக்கு ஏற்றதாக அமைய பரிசோதனைகள் தொடர்கிறது. செயற்கை கணையம் என்பது ஒரு பயன்பாட்டுக்கு மட்டும் கிடையாது. நெட்வொர்க் மூலம் நோயாளி எங்கு சென்றாலும் டிஜிட்டல் சிகிச்சை முறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுவார். நேரத்துக் நேரம், நாளுக்கு நாள் நோயாளியின் மன அழுத்தம் மாறக் கூடியது. அதற்கு ஏற்ப செயற்கை கணையத்தின் செயல்பாடு இருக்க வேண்டும் என்பது இந்த ஆராய்ச்சியில் எதிர்கொள்ளப்படும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது’’ என்று வெர்ஜினியா பல்கலைக்கழக சர்க்கரை நோய் தொழில்நுட்ப மைய முதன்மை ஆராய்ச்சியாளர் போரிஸ் கொவத்சேவ் கூறினார்.