நியூயார்க்

சைத்துறையில் வழங்கப்படும்  உயரிய அமெரிக்க விருதான கிராமி விருதுகளில் பாப் பாடகர் புருனோ மார்ஸ் ஆறு விருதுகளை பெற்றுள்ளார்.

அமெரிக்க நாட்டில் இசைத்துறையில் கடந்த 1959ஆம் ஆண்டில் இருந்து கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.   தற்போதைய ஆண்டின் 60ஆம் விருதுகள் வழங்கும் விழா நீயூயார்க் நகரில் நடைபெற்றது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டுமே இதுவரை நடைபெற்று வந்த இந்த விழா நேற்று முதல் முறையாக நியூயார்க் நகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது,

பல புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் பலர் வந்திருந்த இந்த நிகழ்ச்சியை ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்கினார்.

அமெரிக்காவின் பிரபல பாப் இசை பாடகர் புருனோ மார்ஸ் 7 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.   அதில் 6 விருதுகளை வென்றுள்ளார்.

இந்த ஆண்டின் சிறந்த பாடலாக புருனோ மார்ஸ் இசை அமைத்து பாடிய “24கே மேஜி” என்னும் ஆல்பம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கெண்ட்ரிக் லாமர் 5 விருதுகளைப் பெற்று இரண்டாவதாக உள்ளார்.  சிறந்த வீடியோவுக்கான விருதும் இவரது ஹம்பில் ஆல்பத்துக்கு தரப்பட்டுள்ளது.

சிறந்த புதுமுக கலைஞருக்கான விருதை ஆலிசியா காரா வென்றுள்ளார்.