டில்லி:

பாராளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி ஆற்றிய உரையில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் திட்டத்தின் காரணமாகவே ஏழை,   நடுத்தர மக்களை அரசு பாதுகாத்தது என்று  குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த்  தெரிவித்துள்ளார்.

பரப்பரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது; ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது.

குடியரசு தலைவர் ஆற்றிய உரையின்போது, நாடு முழுவதும் அமல்படுத்தி உள்ள ஆதார் திட்டத்தின் காரணமாகவே  இடைத்தரகர்களின் பாதிப்பில் இருந்து ஏழை,  நடுத்தர மக்களை அரசு பாதுகாத்து உள்ளது என்று கூறினார்.

மேலும், அரசின்ன் 400 திட்டங்களில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதற்கு ஆதார் அவசியமானது.

அதுபோல, பொதுமக்களின் நலன் கருதி, தீனதயாள் அம்ருத் யோஜனா திட்டத்தின் கீழ் மலிவு விலையில் உயிர் காக்கும் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இற்காக நாடு முழுவதும்  111 இடங்களில் 60% முதல் 90% சலுகை விலையில் 5,200 உயிர் காக்கும் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்து.

மேலும், டிஜிட்டல் பணபரிவர்த்தனையில், மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள  பீம் ஆப் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுபோல  டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு உமாங் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும், இந்த  டிஜிட்டல் பண பரிவர்த்தனை எதிர்பார்த்ததை விட பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த செயலியை  100க்கும் மேற்பட்ட அரசு சேவைகளுக்கு  பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும், இதன் காரணமாக நாட்டின் மொத்த மின் உற்பத்தி, தேவையான அளவை விட அதிகரித்துள்ளது. இதனால் மாநிலங்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைப்பதை  மத்திய  அரசு உறுதி செய்துள்ளது.

மேலும், மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் ரயில்வே துறையின் சாதனையில் மைல்கல் என்றும், நாட்டில் உள்ள  11 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் துரிதமாக தயாராகி வருகிறது என்றும் கூறினார்.

மேலும், ஆயிரக்கணக்கான வங்கிகளுக்கு அதிக நிதி ஒதுக்கி சாமானியர்கள் கடன் பெற அரசு  நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,

இஸ்ரோவின் விண்வெளி சாதணைகளால் இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.