
சென்னை,
சென்னையில் மெட்ரோ ரெயிலுக்கான பூமிக்கு அடியில் பாதை அமைக்கப்பட்டு வருவதால், அவ்வப்போது திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வருகிறது.
ஏற்கனவே சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு அதில் மாநகர பேருந்து உள்பட வாகனங்கள் சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று மாலை மீண்டும் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் நேரு பூங்கா – சென்னை சென்ட்ரல் இடையே சுமார் 20 அடி நீளத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. அதிலிருந்து சிமெண்டு கலவை மற்றும் ரசாயன கலவை வெளியேறி வந்தால் பெரும் பரபரப்பு நிலவியது.
நேற்று விடுமுறை தினமாகையால், குறைவான அளவிலேயே வாகனங்கள் சென்றுகொண்டிருந்தால், விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வாகன போக்குவரத்தை மாற்றிவிட்டனர்.
தொடர்ந்து அண்ணாசாலையில் இதுபோன்ற பள்ளங்கள் திடீரென ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் பயத்துடனே வாகனங்களை ஓட்டி வருகின்றனர். எந்த நேரத்தில் எந்த இடத்தில் பள்ளம் ஏற்படுமோ என்ற அச்சத்துடனே வாகனங்களை இயங்க வருவதாக கூறுகின்றனர்.