ளர்ந்து வரும் நாடுகள் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறு சிறு நாடுகள் எல்லாம் இந்தியாவைவிட முன்னணியில் உள்ளன. இந்தியா 62வது இடத்தில் உள்ளது.

இதற்கு என்ன காரணம்?

நாம் நன்றாக இருக்க வேண்டும்.. அதாவது ஒட்டுமொத்த இந்தியாவும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பேசுகிறேன்.

நமது நிதி அமைச்சர் மிகச்சிற்ந்த படிப்பாளி. அவர் வழக்குரைஞராக இருந்து அரசியலுக்கு வந்தவர். அவர் தேர்தலில் தோற்றவர். ஆனால் நிதி அமைச்சராக வந்திருக்கிறார்.

இவர் வழக்கறிஞராக இருந்தபோது நிறைய நிறுவனங்களுக்காக  வாதாடி உள்ளார். அவர் வாதாடிய பல நிறுவனங்கள்  திவாலாகி உள்ளன. பல கம்பெனிகள் பொருளாதாரத்தில் நசிந்து உள்ளன.

இந்நிலையில்தான் அவர் நிதி அமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

அதன் காரணமாக இந்திய பொருளாதாரமும் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. தற்போது 62வது இடத்தில் உள்ளது.

பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளில், பெரும்பான்மையான நாடுகள் சிறிய நாடுகள். விரைவான வளர்ச்சி அடைந்துள்ளன.

இன்னொரு விசயத்தைப் பார்ப்போம்..

ஜிஎஸ்டி மூலமாக தமிழ்நாடு  ஒரு லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அளித்துள்ளது.. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசின் எந்தவித திட்டமும் தமிழகத்திற்கு வரவில்லை.

இதற்கு பதிலாக  அணுஉலை திட்டம், மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற நாசகார திட்டங்கள் மட்டுமே தமிழகத்திற்கு வந்துள்ளன.

வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும்  வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இரு பகுதிகளும் இந்தியாதான்… ஆனால் அது வேறு இந்தியா:  வட இந்தியா.  இது தமிழகம், தென்னிந்தியா.

ஆரம்பக்கல்வி கூட கற்காதவர்கள் அதிகபேர் உள்ளது வட இந்தியாவின் நிலை.  20 லட்சம் பொறியாளர்கள் உள்ளது தமிழகத்தில். தென்னிந்தியாவில்.

20 லட்சம் பொறியாளர்கள் என்பது,  இந்தியாவில் உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் சமமானது.

20 லட்சம் பொறியாளர்கள் உள்ள தமிகத்ததிற்கு கம்யூட்டர் தொழிற்சாலை, கார் தொழிற்சாலை, விமான தொழிற்சாலைகள் போன்ற மிகப்பெரிய தொழிற்சாலைகளை  கொண்டு வந்திருக்க வேண்டும்.

ஆம்…அந்த தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு கொண்டு வந்திருந்தால், இந்தியா வளர்ச்சி அடைந்திருக்கும். ஆனால் தமிழக்ததிற்கு அப்படியான திட்டங்கள் ஏதும் இல்லை.

அதே நேரம், இன்னொரு விசயத்தைக் கவனிக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் 20 லட்சம் கிராமங்களுக்கு மின் வசதி ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

சுதந்திரம் அடைந்து 70 வருடம் ஆகி உள்ள நிலையில், இப்போதுதான் மின்சாரம் கொடுத்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.

பள்ளிக்கூடங்களே இல்லாத ஊர்களுக்கு பள்ளிக்கூடங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி யிருக்கிறோம் என்கிறார்கள்.

அப்படியானால் 70 வருடங்களாக  என்னையா செய்துக்கிட்டிருந்தீங்க…? ஒன்னுமே பண்ணல…!

ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதையெல்லாம் செய்து பல ஆண்டுகாலம் ஆகிவிட்டது.

உயர்கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே அதிகமாக இருப்பது தமிழகத்தில்தான்..!

ஆனால். இவ்வளவு வளமுள்ள ஒரு மாநிலத்தைப் புறக்கணித்துவிட்டு, இந்த நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டிவிட்டு, அனாமேதயமாக வீணாக பிற பகுதிகளில் செலவு செய்யும்போது… அடுத்த வருடம் இந்தியா பொருளாதாரத்தில்  73, 83 என்று உலகத்தின் கடைசி நாடாக வரவும் வாய்ப்பு உள்ளது.

இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

ஐரோப்பிய யூனியன் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஒரே பாஸ்போர்ட் எடுத்தால் எல்லா நாடுகளுக்கும் பயணிக்க முடியும். அதுபோல காவல் என்று எடுத்துக்கொண்டால், யூரோப்பின் நாடுகளுக்கு தனியாக ஆர்மி உள்ளது.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஆர்மி உள்ளது. அதுபோல யூரோப்பியன் நாடுகளுக்கும் தனியாக ஆர்மி உள்ளது. இந்த மாதிரியான நிலையிலே ஒரு கூட்டமைப்பாக இயங்குகிறது.

இதே போன்ற நிலை இங்கும் வர வேண்டும்.

அதாவது.. இந்தியாவை  ஒரே அடுப்பில் சோறாக்கி 140 கோடிமக்களுக்கம் பொங்கி போட வேண்டும் என்கிற  அவசியமில்லை.

ஒவ்வொரு வீட்டுக்கும் அவர்களே சமைக்கட்டும்…  அவனவன் சம்பாதிக்கட்டும்…!

கூட்டுக்குடும்பத்தில இருக்கும்போது வளர்ச்சி இல்லாமல்,  இருக்கறதை விற்று சாப்பிடுவார்கள்..

ஆனா தனிக்குடித்தனம் என்று வந்தபிறகுதான் நிறைபேர் வளர்ச்சி அடைந்துள்ளார்கள். என்பது கிராமங்களில் காணப்படும் உண்மை.

அதுபோல இந்தியா என்பதை  ஒரு கூட்டமைப்பாக மாற்ற வேண்டும்.  ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனித்தனி அளவுகோல், தனித்தனி பொருளாதாரம், தனித்தனி படிப்பு, தனிப் பாரம்பரியம் எல்லாமே இருக்கின்றது.

அதனால்  அனைத்து மாநிலத்துக்கும் ஒரே தேர்வு, ஒரே தேர்வு முறை போன்றவற்றை தூக்கி போட்டுவிட்டு –  ஒவ்வோரு மாநிலத்திற்கும் தனித்ன்மை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு – தனியாக பிரித்து கொடுங்கள்.

ஒவ்வொரு மாநிலத்தையும் தனித்தனி பிரதேச நாடுகளாக பிரித்து கொடுங்கள்.

இந்தியா என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தி, ராணுவம், வெளியுறவுத்துறை போன்ற முக்கியமான ஒருசில துறைகளை மட்டும் டில்லியின் அதிகாரத்துக்கு விட்டுவிட்டு, மற்ற வளர்ச்சி திட்டங்களை எல்லாம் அந்தந்த மாநிலங்களே பங்கெடுக்கக்கூடியது போல செய்ய வேண்டும்.

அப்படிச் செய்தால்… வளரும் நாடுகளாக அல்ல… வளர்ந்த நாடுகளாக.. நார்வே, டென்மார்க், சுவிடன் போன்ற நாடுகள் போல… தமிழ்நாடு ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக வந்து நிற்கும்… மகாராஷ்டிராக சிறந்த நாடாக வந்து நிற்கும். இவைகளுக்கு இடையே போட்டிப்போட்டிக்கொண்டு வளர்ச்சி அடையும்போது. இந்தியா என்ற துணைக்கண்டம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்.

இந்த நோக்கத்தில்தான் சொல்கிறேன். இதை பிரிவினை வாதமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை..

இந்தியா என்ற தேசம் வந்த பிறகுதான் இவ்வளவு பொருளாதார நெருக்கடி  ஏற்பட்டுள்ளது என்கிறபோது.. ஒவ்வொரு மாநிலத்தையும் ஒவ்வொரு தேசமாக,  ஐரோப்பிய யூனியனில் எப்படி நாடுகள் உள்ளதோ அதுபோல் இந்தியா என்ற  ஒரு பொது கட்டமைப்பை, துணைகண்டம்-  இந்திய ஒன்றியம் என்று மாற்ற வேண்டும். தற்போதே ஏறக்குறைய அரசியல் சட்டத்தில் கூட அப்படித்தான் இருக்கிறது.

ஆம்..

இந்திய ஒன்றியமாக இந்திய யூனியனாக எல்லா மாநிலங்களும் , தமிழ்நாடு போன்ற பல நாடுகள் சேர்ந்த ஒனறியமாக  இந்திய யூனியனதாக ஆக்கிவிட்டால்.. அனைத்து  பகுதிகளும் முன்னேறும்.

ஒவ்வொரு தேசங்களும் ஒரு வளர்ச்சி அடைந்த தேசமாக மாறும்.

அப்படி இன்றி அனைத்து அதிகாரங்களையும் ஒரு தனி மனிதரிடம்.. தனி அமைப்பிடம் கொண்டுபோய் கொடுத்தால், கண்டிப்பாக இதைவிட மோசமான பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்க வேண்டியதிருக்கும். இதை கவனிக்க வேண்டியவர்கள் கவனிக்க வேண்டும்….

என்னுடய மனதில் உள்ளதை பேசியிருக்கிறன். இது விவாதத்திற்கு உட்பட்டது.

விவாதிப்போம்.. அனைவரின் முன்னற்றம் நமது நோக்கம்.