டில்லி :
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின அணிவகுப்பின்போது, குடியரசு தினத்தை கவுரவப்படுத்தும் வகையில் 21 குண்டுகள் முழங்கப்படும். இந்த குண்டுகள் சிறிய ரக டாங்கி மூலம் வெடிக்க வைத்து மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்.
இந்த நிகழ்ச்சிக்கு பல ஆண்டுகளாக பிரிட்டிஷ் கால டாங்கிகளே பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது இந்த டாங்கிகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இந்த ஆண்டோடு இந்த டாங்கிகளுக்கு ஓய்வுகொடுக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
அதையடுத்து அடுத்த ஆண்டு முதல் புதிய ரக துப்பாக்கி மூலம் 21 குண்டு முழங்கி குடியரசு தின விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.