டில்லி:

குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.

ஜனாபதியாக பதவியேற்ற பின்பு முதல்முறையாக அவர் ஆற்றிய குடியரசு தின உரையில், ‘‘நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை நினைவு கூறும் நேரம் இது. நாட்டு மக்கள்தான் ஜனநாயகத்தை உருவாக்குகிறார்கள். ஒவ்வொருவரும் ஜனநாயகத்தின் ஒரு அங்கம் மட்டுமல்லாமல், தூண்களாக திகழ்கிறார்கள்.

நாட்டை காக்கும் முப்படை வீரர்களுக்கும், வளப்படுத்தும் விவசாயிகளுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு தூணாக இருக்கும் இளைஞர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள். நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் துறைகளில் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருவது பெருமை அளிக்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளுக்கு நிகராக கல்வி உள்பட அனைத்திலும் சம உரிமை தரப்பட வேண்டும். ஆரோக்கியமான குழந்தைகள் தான் வலிமையான இந்தியாவின் எதிர்காலம் என்பதை உணர வேண்டும். கல்வியை ஊக்குவிப்பதற்காக நாம் நிறைய பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். புதுமையான குழந்தைகளால் தான் புதுமையான இந்தியாவை கட்டமைக்க முடியும்’’ என்றார்.