மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஓப்பன் டென்னிஸ் போட்டியில், டென்மார்க்கை சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கி, ருமேனியாவை சேர்ந்த சிமோனா ஹாலெப் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தேர்வானார்கள்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஜனவரி 15ந்தேதி தொடங்கிய போட்டி வரும் 28 ம் தேதி வரை நடைபெறுகிறது.
நேற்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் டென்மார்க்கை சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கியும், பெல்ஜியம் வீராங்கனை மெர்டனிஸ்-ம் மோதினார்கள். பரபரப்பாக நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில், டென்மார்க்கை சேர்ந்த வோஸ்னியாக்கி 6-3, 7(7)-6(2), என்ற நேர் செட் கணக்கில் பெல்ஜியம் வீராங்கனையை தோற்கடித்த் இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக முன்னேறினார்.
அதுபோல மற்றொரு போட்டியில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப்-க்கும், 21-ம் நிலை வீராங்கனையான கெர்பருக்கும் இடையே போட்டி நடைபெற்றது. மிகவும் ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டை 6-3 என்ற புள்ளியில் ஹாலெப் கைப்பற்றினார். ஆனால், 2வது சுற்றில் 4-6 என்ற புள்ளி கணக்கில் இழந்தார்.
இதையடுத்து 3வது செட் மிகவும் விறுவிறுப்பாகவும், ஆக்ரோஷமாகவும் நடைபெற்றது. இந்த செட்டில், ஹாலெப் 9-7 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதைத்தொடர்ந்து தற்போது 2வது இடத்தில் உள்ள கரோலின் வோஸ்னியாக்கி-க்கும், 1-ம் நிலை வீராங்கனையான ஹாலெப்-க்கும் இடையே யார் நம்பர் 1 என்ற பலப்பரீட்டை நடைபெற உள்ளது.