பாங்காங்
புத்த மதத் துற்வியான லுவாங் போர் பிலான் இறண்டு இரு மாதம் ஆகியும் புன்னைகை புரியும் முகத்துடன் காட்சி அளிக்கிறார்.
கம்போடியாவை சேர்ந்த புத்த மதத் துறவி லுவாங் போர் பிலான் தாய்லாந்தில் பல வருடங்களாக ஒரு புத்தர் கோவிலில் தலைமைத் துறவியாக பதவி வகித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதியன்று அவர் உடல்நலக் குறைவால் பாங்காக் உள்ள ஒரு மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது உடல் அவர் பணி புரிந்து வந்த கோவிலில் அஞ்சலிக்காக ஒரு சவப்பெட்டியில் வைக்கப் பட்டிருந்தது.
புத்த மத வழக்கப்படி அவரை தற்போது புதைக்க உள்ளனர். அதற்காக அவரது உடல் ஆடை மாற்றுவதற்காக சவப்பெட்டியில் இருந்து எடுக்கப்பட்டுள்லது. அப்போது அவர் உடல் சிறிதும் கெட்டுப் போகாமல் பெட்டியினுள் வைத்த அதே நிலையில் காணப்பட்டுள்ளது. அத்துடன் அவர் முகம் புன்னகைப்பது போல் காணப்பட்டுள்ளது. இந்த அதிசயத்தைக் காண அந்த நாட்டிலுள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக அந்தக் கோவிலுக்கு வருகை புரிகின்றனர்.