சென்னை:
தமிழக அரசின் நிதி நிலையை மக்கள் தலையில் சுமத்திய நிலையில் எம்எல்ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியம் எனக்கு வேண்டாம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இதனால் மக்கள் அல்லப்படுகின்றனர். இதை திரும்ப பெற வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது என்று அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நிதி நிலை நெருக்கடியை காரணம் காட்டி அதிமுக அரசு மக்கள் தலையில் பெரும் சுமையை சுமத்தி உள்ளது. மக்கள் தலையில் சுமையை சுமத்திவிட்டு எம்.எல்.ஏக்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே அப்படிப்பட்ட ஊதிய உயர்வே எனக்கு வேண்டாம். அதை நான் பெறப்போவதும் இல்லை. உயர்த்திய பேருந்து கட்டணத்தை உடனடியாக திரும்பபெற வேண்டும். நிதி நெருக்கடியை போக்க மாற்று வழியை கண்டறியாமல் மக்களை அரசு வஞ்சித்துள்ளது’’ என்றார்.