சென்னை:
மத்திய அரசின் தலையாட்டி பொம்மைகளிடமிருந்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலை
தங்களை ஆதரிக்கும்படி
மக்களுக்கான மருத்துவர் அரங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவிலேயே முதன் முதலாக 1914ல் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் துவங்கப்பட்டது. இதில் தற்போது ஒரு லட்சத்து 15 ஆயிரம் மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இம்மருத்துவர்களின் பல்வேறு நிர்வாக வசதி களுக்காக மருத்துவக் கழக நிர்வாகக்குழு தேர்தல் நடைபெறுகிறது.
இந்த கவுன்சிலுக்கு 7 உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. நான்கு அணிகள் போட்டியிடுகின்றன.
இதில் ஒரு அணியான மக்களுக்கான மருத்துவர் அரங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்:
“மோசடித் தனத்தை முறியடித்து மருத்துவத்துறையை பாதுகாக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். மத்தியஅரசு ஆட்டி வைக்கும் தலையாட்டி பொம்மைகளாக இருப்பவர்களை ஓரங்கட்டவும், மருத்துவர்களின் உரிமைகளை பாதுகாக்க போராடவும் ஊழலற்ற சிறந்த நிர்வாகத்தை நடத்துவது அவசியமாகும்.
இந்த தேர்தலில் போட்டியிடும் மக்களுக்கான மருத்துவர் அரங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரம்பரியமிக்க தமிழக மருத்துவக் கவுன்சில் தற்போது தனித்தன்மை இழந்து, மருத்துவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலும் மாபியா கும்பலும் இயக்குகிற சுயநலவாதிகளிடமும் சிக்கி மிக மோசமான நிலையில் உள்ளது.
இதை முறியடிக்கும் நோக்கத்துடன் மருத்துவர் அரங்க அணி சார்பில், மருத்துவர்கள் சந்திரசேகர் கோவிந்தசாமி: எண் – 7, காமராஜ் தங்கசாமி: எண்-13, காசி சண்முகம்: எண்-14, மணிவேலன் ராஜாமணிக்கம்: எண் -17, பொன்னம்பலநாதன் அம்மையப்பன்: எண்- 18, ராம்குமார் செல்வராஜ்: எண்- 24, ரெக்ஸ் சற்குணம் சீசில்சத்யகுமார்: எண்-28 ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த அணியை வெற்றிபெறச் செய்ய அனைத்து ஜனநாயக, வெகுஜன அமைப்புகளும் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்” என்று மக்களுக்கான மருத்துவர் அரங்க அணி வேண்டுகோள் விடுத்துள்ளது