மெல்போர்ன்,

ஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் தங்களது 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

2-வது சுற்றுகளில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் -பூரவ் ராஜா இணை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஜார்ஜியாவின் நிகோலஸ் பாஷிலாஷ்விலி – ஆஸ்திரியாவின் ஆன்ட்ரியா ஹெய்தர் இணையை வென்றது.

இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பிரான்ஸின் எட்வர்ட் ரோஜர் வாùஸலின் இணை 6-2, 7-6(7/5) என்ற செட் கணக்கில் கனடாவின் வாசெக் போஸ்பிஸில்-அமெரிக்காவின் ரயான் ஹாரிசன் இணையை வீழ்த்தியது.

இந்தியாவின் திவிஜ் சரண்-அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி 7-6(7/5), 6-4 என்ற செட் கணக்கில் செர்பியாவின் விக்டர் டிராய்க்கி-ருமேனியாவின் மேரியஸ் கோபில் இணையை வீழ்த்தியது.

மற்றொரு போட்டியில்   தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2-வது சுற்றில் பிரான்ஸின் கேல் மான்ஃபில்சை வீழ்த்தினார்.

முதல் செட்டை 4-6 என இழந்த ஜோகோவிச், 6-3, 6-1, 6-3 என அடுத்த 3 செட்களை தன் வசமாக்கினார். இந்த வெற்றியின் மூலம் அவர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ற்றொரு ஆட்டத்தில் உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-4, 6-4, 7-6 (7/4) என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஜேன் லெனார்ட் ஸ்ட்ரஃபை வீழ்த்தினார்.

இதர 2-வது சுற்று ஆட்டங்களில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 6-7(6/8), 3-6, 6-3, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி அமெரிக்காவின் டெனிஸ் குத்லாவையும், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் 6-1, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான பீட்டர் கோஜோவ்ஸிக்கை வென்றனர்.