
சென்னை,
சென்னை திருவிக நகர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் நரேந்தர், உடற்கல்வி ஆசிரியரின் தண்டனை காரணமாக உயிரிழந்தாக கூறப்பட்டது. இதன் காரணமாக உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பள்ளியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில்,உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்கு, தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
திரு.வி.க. நகரில் உள்ள மாணவர் நரேந்திரனின் இல்லத்துக்கு, தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மாணவரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
Patrikai.com official YouTube Channel