டில்லி,
விபத்துக்களை தடுக்கும்பொருட்டு நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 1ந்தேதி முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய போக்குவர்த்து துறை அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்து உள்ளார்.
ஜிபிஎஸ் என்ப்படும் இருப்பிடத்தை அறியும் கருவியை ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடுமுழுவதும் உள்ள பேருந்துகள், டாக்சி போன்ற வாகனங்களில் கட்டாயம் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே, டில்லியில் ஓடும் வாகனங்கள் அனைத்தும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது நாடு முழுவதும் உள்ள வாகங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
தலைநகர் டில்லியில் ஓடும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி 2009ம் ஆண்டு முதல் பொறுத்துவது கட்டாயமாக்கப்பட்டது. சாலைப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த விதிமுறை அமலானது குறிப்பிடத்தக்கது.