சென்னை,
ஹஜ் பயணத்துக்கு மானியத்தை ரத்து செய்த மத்திய அரசுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஹஜ் புனித பயணத்திற் கான மானியத்தை மத்திய அரசு திடீர் என்று ரத்துசெய்துள்ளதை தேசிய முற்போக்கு திராவிட கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
எனவே மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.