சென்னை,

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையை உறுதி செய்ய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று டில்லி செல்கிறார்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்க செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மோடியின் வருகையை றுதி செய்வதற்காக தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று பிற்பகல் டில்லிக்கு செல்கிறார். அவர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் விழாவில் பங்கேற்கும்படி அழைப்புவிடுப்பார் என்று கூறப்படுறது.