அபுதாபி,
ஐக்கிய அரபு அமிரகம் செல்பவர்களுக்கு புதிய விதியை அந்நாட்டு அரசு அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இனிமேல் நல்லவர்கள் மட்டுமே அந்நாட்டுக்கு செல்ல முடியும்.
வேலைக்காகவோ மற்றும் படிப்புக்காகவோ ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்பவர்கள் இனிமேல் நன்னடத்தை சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் இந்த புதிய விதி அடுத்த மாதம் (பிப்ரவரி) 4ந்தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய அரசு நாட்டின் அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி வெளிநாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமிரகம் நாடுகளுக்கு வருபவர்கள் நன்னடத்தை சான்றிதழ் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமிரகத்தின் இந்த புதிய விதியை ஐக்கிய அரசு நாடுகளின் ஒருங்கிணைப்பு குழுவும் அங்கீகரித்து உள்ளது. இந்த புதிய விதி அடுத்த மாதம் (பிப்ரவரி) 4ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது.
இதன்படி ஐக்கிய அரபு நாடுகளுக்கு வேலைக்கு வருபவர்கள் தாங்கள் விசா விண்ணப்பிக்கும்போது, நன்னடத்தை சான்றிதழும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த சான்றிதழ் உடன் விசா விண்ணப்பிப்பவர்கள் கடந்த 5 ஆண்டு எங்கிருந்தார் என்ற தகவலும் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி உள்து.
மேலும். இந்தச் சான்றிதழ் ஐக்கியஅரபு தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும், அல்லது வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்தின் வாடிக்கையாளர் சேவை மையங்கள் பார்வையிட்டு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவே இதை நடைமுறைப்படுத்துவதாக ஐக்கிய அரபு அமிரகம் அறிவித்து உள்ளது.
இந்த புதிய விதி காரணமாக சாதாரண வேலைகளுக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.