தாய்லாந்து,

தாய்லாந்து பிரதமர், தனக்கு பதிலாக தனது உருவ அட்டையை செய்தியாளர்கள் முன்பு வைத்து விட்டு, அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று செய்தியாளர்களை அவமதித்து சென்றார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தாய்லாந்தில் சில மாதங்களாக அரசியல் குழப்பங்கள் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் குழந்தைகள் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா ( Prayut Chan-o-cha)விடம் செய்தியாளர்கள் கேள்விகள் கேட்க திரண்டனர். அதற்கு ஆயத்தமாக நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கின் வெளியில் மைக்குகளை வைத்து தயாராக இருந்தனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி அரங்கை நோக்கி வந்த பிரதமர் பிரயுத் சான் ஓ சா, தனது உதவியாளரை பார்த்து, அட்டையால் செய்யப்பட்ட தனது முழு உருவ படத்தை எடுத்து வரக்கூறினார். பின்னர்  அந்த அட்டை படத்தை செய்தியாளர்கள் வைத்திருந்த மைக்கின் முன் வைத்துவிட்டு, ‘உங்களது கேள்விகளை  இதனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்’ என்று கூறி  கையை அசைத்து பைபை என்று கூறிவிட்டு சென்றார்.

பிரதமரின் இந்த நடவடிக்கை செய்தியாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. தங்களை அவர் அவமானப்படுத்தி விட்டதாக குமுறினர்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ…