
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும், ஊடகவியலாளருமான தயா மாஸ்டர் என்று அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதியை ஒரு நபர் தாக்கிய சம்பவம் யாழ்ப்பாணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்திப்பிரிவு பணிப்பாளராக தற்போது பணிபுரிகிறார் தயா மாஸ்டர்.
நேற்று அவரது அலுவலகத்துக்குள் கத்தியுடன் சென்ற நபர் ஒருவர் தயா மாஸ்டரை நாற்காலியை வீசித் தாக்கினார். கத்தியாலும் குத்த முயன்றஆர். அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இத்தாக்குதலில் சிறு காயங்கள் ஏற்பட்டதை அடுத்து தயா மாஸ்டர் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
[youtube-feed feed=1]