கோரக்பூர்

டந்த ஆண்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் மரணம் அடைந்த மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பாஜகவின் ஆட்சி உத்திரப் பிரதேசத்தில் அமைந்த பின் கடந்த 2017ஆம் ஆண்டு கோரக்பூர் பாபா ராகவதாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மருத்துவமனையில்   சிலிண்டர்கள் வாங்க பணம் செலுத்தாததால் ஏற்பட்ட இந்த பற்றாக்குறையால் சுமார் 70 குழந்தைகள் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.

இன்று காலை இதே மருத்துவமனையின் நிர்வாக கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தகவல் அறிந்து 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்துள்ளனர்.     இந்த விபத்தில் கல்லூரி முதல்வர் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து விட்டதாகவும்,   பல முக்கிய ஆவணங்கள் எரிந்திருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.   விபத்துக்கான காரணம் எதுவும் வெளி ஆகாத நிலையில் அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.