டில்லி

காத்மா காந்தியின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி தொட்ரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் அறிக்கை அளித்துள்ளார்.

கடந்த 1948ஆம் வருடம் கோட்சே என்பவர் மூன்றுமுறை துப்பாக்கியால் சுட்டதால் மகாத்மா காந்தி உயிரிழந்தார்.   அதன்பின் கோட்சேக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.   சமீபத்தில் காந்தியின் உடலில்  நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் அந்த நான்காவது குண்டால்தான் மரணம் ஏற்பட்டது எனவும் ஒரு வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் பதியப்பட்டது.  மேலும் அந்த நான்காவது குண்டு எங்கிருந்து வந்தது என்றும் இந்த வழக்கில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் அமரேந்தர் சரண் நியமிக்கப்பட்டார்.    இந்த வழக்கை ஆராய்ந்து அவர்  இன்று ஒரு அறிக்கை நீதிமன்றத்துக்கு அளித்துள்ளார்.  அதில், “மகாத்மா காந்தியை கோட்சேவை தவிர வேறு யாரும் சுட்டதற்கான  ஆதாரம் எதுவும் இல்லை.   எனவே மகாத்மா காந்தி கொலை தொடர்பான மறு விசாரணைக்கு தேவை இல்லை” என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன