பாலக்காடு

குடியரசு தினத்தன்று மீண்டும் கேரள பள்ளி ஒன்றில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடி ஏற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்ற வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றி ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கொடி ஏற்றினார்./    மாவட்ட நிர்வாகம் அதற்கு தடை விதித்திருந்தது.   ஆனால் அதை மீறி பகவத் கொடி ஏற்றினார்.    இதற்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆர் எஸ் எஸ் நிர்வாகி ஒருவர் வரும் குடியரசு தினத்தன்று பாலக்காட்டில் உள்ள பாரதீய வித்யா நிகேதன் பள்ளியில் தேசியக் கொடி ஏற்றுவார் என அறிவித்துள்ளார்.    அவர் மேலும்,  மோகன் பகவத், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று எங்கிருக்கிறாரோ, அங்கு அவர் தேசியக் கொடி ஏற்றுவார்.   சென்ற சுதந்திர தினத்தன்று அதனால்தான் கேரளாவில் கொடி ஏற்றினார்.    அதே போல ஜனவரி 26ஆம் தேதி கேரளாவில் இருப்பார்.   அதனால் இங்கு அவர் கொடி ஏற்ற உள்ளார்.”  எனக் கூறி உள்ளார்.

கேரள மாநிலத்தில் ஆளூம் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்புக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.   இந்நிலையில் இந்த அறிவிப்பு மீண்டும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.