சென்னை,

போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுப்பட வேண்டிய நிலுவை தொகை காரணமாக போக்குவரத்து தொழிலாளர் கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவை தொகை கொடுக்க எங்களிடம் மனம் இருக்கிறது…. ஆனால் பணம் இல்லையே என்று வருத்தத்துடன் கூறினார்.

 

ஊதிய உயர்வு உட்பட 7 விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலா ளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கிறது.

இந்த நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது,  ”போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எங்களுக்கும் ஆசைதான். ஆனால் இப்போது எங்களிடம் போதிய நிதி இல்லை”.

“தமிழக அரசு நிதி பற்றாக்குறையால் திணறி வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தை தர அரசுக்கு மனம் உள்ளது ஆனால் நிதிதான் இல்லை” என்று பேசினார்.

மேலும்  ‘ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கு படிப்படியாக பணி வழங்கப்படும்’ என்றும் குறிப்பிட்டா