டில்லி :
மார்பில் 97 வெடிகுண்டு துகள்கள் துளைத்து நான்கு ஆண்டுகளாக அவதிப்பட்ட நபருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து வெடிகுண்டு துகள்கள் அகற்றப்பட்டன.
உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர் உசேன். வயது 27. நான்கு ஆண்டுகளுக்கு முன் குண்டு வெடிப்பின் போது அவரது மார்பில் 97 இரும்பு துகள்கள் புகுந்துவிட்டது. இதனால் தவித்து வந்த அவர், மருத்துவர்களை நாடினார். ஆனால் அந்தத் துகள்களை அகற்றினால் இதயம், நுரையீரல், இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டும் என அஞ்சி அறுவை சிகிச்சை செய்ய மறுத்து விட்டனர்.
ஆகவே வலியும் வேதனையுடன் நான்கு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சமீபத்தில், பாதிக்கப்பட்ட பகுதியில் வீக்கம் ஏற்பட்டது. வலியும் அதிகமானது.
ஆகவே மீண்டும் மருத்துவர்களை நாடினார். அவர்கள் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறினர். அங்கு மருத்துவர் பிப்லப் மிஸ்ரா, உசேனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. இது குறித்து மருத்துவர் பில்லப், “உசேன் உடலிலிருந்த இரும்பு துகள்களை மொத்தமாக சேர்த்தால் டயம் பாம் போன்று உள்ளது” என்று தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை வெற்றி பெற்று உயிர் பிழைத்த உசைன், தன் உயிரை காப்பாற்ற போராடிய மருத்துவர்களுக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார்.