டில்லி:
‘நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.5 சதவீதமாக இருக்கும்’ என, மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி 7.1 சதவிகிதததில் இருந்து 2017-18ம் ஆண்டில் 6.5% ஆக குறைந்துவருவதாக கூறி உள்ளது.
கடந்த 2016-17 ம் ஆண்டு 5.7 சதவிகிதத்தில் இருந்த 7.3 சதவிகிதமாக உயரும் என எதிர்பார்த்த நிலையில் 7.1 சதவிகிதமாக உயர்ந்தது. தற்போது, இது குறைந்தத 6.5 சதவிகிதமாக உள்ளது என்று அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
2016- – 17ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 7.1 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 6.5 சதவீதமாக இருக்கும். ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில், 5.7 சதவீதமாக குறைந்தது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.7 சதவீதமாக இருக்கும் என, தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி காரணமாகவே, ஜிடிபி குறைந்துள்ளதாக யெஸ் வங்கி தலைமை பொருளாதார நிபுணர் சுபாந்தா ராவ் கூறியுள்ளார்.
கட்ந்த 15 மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி அறிவித்த பணமதிப்பிழப்பு காரணமாக இந்திய பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்ட தாகவும் இதன் காரணமாக ஜிடிபி 4.88 சதவிகிதத்தை தொட்டதாகவும் கூறி உள்ளார்.
பின்னர் அது படிப்படியாக 5 சதவிகிதம் உயர்ந்தது என்றும் பின்னர் ஜிஎஸ்டி அமல்படுத்தியதன் காரணமாக ஜிஎஸ்டியின் வளர்ச்சி விகிதம் குறைவானதாகவே இருந்தது என்றும் கூறி உள்ளார்.
கடந்த 13 மாதங்களில் எண்ணை நிறுவனங்கள், ஸ்டீல் கம்பெனிகள் போன்ற 8 கோடி துறைகளில் ஜிடிபி 6.8 சதவிகிதமாக இருந்ததாகவும்,
இது வரும் 2018-2019ம் ஆண்டில் இயல்பான நிலையை அடையும் என்று ஆய்வாளர்கள் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி நம்பிக்கை கொண்டுள்ளனர். “அடுத்த நான்கு முதல் ஆறு காலாண்டுகளில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.