சென்னை:  

மிழகம் முழுவதும்  இன்று 3வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்கள்.

ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவைத்தொகை, வருங்கால வைப்புநிதி நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும்   உள்ளிட்ட 7 அம்சகோரிக்கையை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்பட 13  தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் மாலை  முதல்  போராட்டத்தில் குதித்துள்ளன.

போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்களுடன்  தமிழக அரசும், தொழிலாளர் ஆணையமும் பலசுற்று பேச்சுவார்த்த நடத்தியும், இரு தரப்பினருக்கும் இடையே எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதன் காரணமாக நேற்று முன்தினம் மாலை முதல்   போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடங்கியது.

இதனால் நேற்று தமிழகமெங்கும் பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்பட்டது. அரசு பஸ்கள் இயங்காததால் அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் பெரும் பாதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, தற்காலிக ஊழியர்கள், தனியார் பஸ்களை வைத்து அரசு 10 சதவிகித அளவு பேருந்துகளை இயக்கி வருகிறது.

இதற்கிடையில் சென்னை உயர்நீதி மன்றத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்ததுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், போக்குவரத்து தொழிலாளர்கள்  உடனே வேலைக்கு திரும்ப வேண்டும் என்று எச்சரித்து உள்ளது.

ஆனால்,  தொழிற்சங்கங்களோ, பிடிவாதமாக வேலை நிறுத்தம் தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று 3வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்து வருகிறது.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அரசு தனியார் பேருந்துகளை களத்தில் இறக்கி உள்ளது. அதுபோல தனியார் கல்லூரி பேருந்துகளும் பயணிகள் வசதிக்காக  இறக்கப்பட்டு வருகின்றன.

மேலும் வெளியூரில் இருந்து பேருந்துகளை வரவழைத்து சென்னையில் இயக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பேருந்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்கள் கூறும்போது, அரசு உடனடியாக  போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவையை தொகையை  வழங்கி,போக்குவரத்தை முழுமையாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள்  கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழக அரசின் கையாலாகததனத்தால் அரசின்  அனைத்து நிவாகமும் முடங்கி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.