
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துத் தொழிலாளிகள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துவரும் தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கத்தின் தலைவர்கள், “நீதிமன்ற உத்தரவு இன்னும் எங்களது கைக்கு வரவில்லை. வந்த பிறகு படித்து அதற்கு ஏற்ப போராட்டம் குறித்து திட்டமிடுவோம்.
அதே நேரம், பணியில் சேராவிட்டால் வேலை நீக்கம் என்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தால் அதை சட்டப்படி எதிர்கொள்வோம். எங்களது வேலை நிறுத்தம் தொடரும்” என்று அறிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel