பாட்னா :
பீகாரில் ஆண்களை கடத்தி, கட்டாயப்படுத்தி, துப்பாகி முனையில் பெண்ணை திருமணம் செய்து வைப்பது அதிகரித்து வருகின்றது.
பீகார் மாநிலத்தில் உள்ள பொகாரோ ஸ்டீல் பிளாண்ட் நிறுவனத்தல் பொறியாளராக பணி புரிபவர் வினோத் குமார் என்ற இளைஞர். அவருக்கு வயது 29.
அவரை துப்பாக்கி முனையில் கடத்தி, திருணம மண்டபத்துக்கு கொண்டுவந்தது ஒரு கும்பல். அங்கு மணமகள் தயாராக இருந்தார். அவருக்கு தாலிகட்டாவிட்டால் சுட்டுக்கொன்றுவிடுவோம் என்று கும்பல் மிரட்டியது.
வினோத்குமார் கதறி அழுதபடியே தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினார். ஆனால் துப்பாக்கி கும்பல் கடுமையாக மிரட்டியது.
இதனால் அழுதபடியே அந்த மணப்பெண்ணுக்க தாலி கட்டினார் வினோத் குமார்.
பீகாரில் இது போன்ற கட்டாய திருணம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
“திருமணத்துக்குக் காத்திருக்கும் இளம்பெண்களின் உறவினர்கள், தங்கள் உறவினர்களிலேயே நல்ல மணமகனை தேடுகின்றனர். சம்பந்தப்பட்ட இளைஞருக்குத் தெரியாமல் கண்காணிக்கின்றனர்.
திருமணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டு, மணமகனை துப்பாக்கி முனையில் கடத்தி தாலி கட்ட வைக்கின்றனர்.
அங்கு மாப்பிள்ளைக்கு அதிக வரதட்சணை கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனாலேயே இது போன்ற சம்வங்கள் நடக்கின்றன. சமீபமாக இது போன்ற நிகழ்வுகள் அதிகரித்திருக்கின்றன ” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.