கொல்கத்தா
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வடிவமைத்த அம்மாநில சின்னம் இன்று வெளியிடப் பட்டுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சின்னம் வடிவமக்கப் பட்டுள்ளது. அதன் படி மேற்கு வங்கத்துக்கு புதிய சின்னம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த சின்னத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வடிவமைத்துள்ளார். இந்த சின்னம் மத்திய அரசால் அங்கீகரிக்கப் பட்டதையொட்டி இன்று அந்தச் சின்னம் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த சின்னத்தில் பிஸ்வா பங்களா சின்னம், அதன் மேல் தேசிய சின்னமான அசோகர் தூண் அகியவை இருக்கும்படி மம்தா பானர்ஜி அமைத்துள்ளார். சுற்றிலும் பச்சை நிறத்தில் பார்டர் உள்ளது. இந்த சின்னம் இனி மாநில அரசால் பயன்படுத்தப் படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சின்னத்தை வெளியிட்ட மம்தா பானர்ஜி தனது உரையில், “ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதன் தனித் தன்மைக்கேற்ப சின்னம் உள்ளது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் மேற்கு வங்கத்துக்கு ஒரு சின்னம் இல்லை என்பதால் இதற்காக நாங்கள் ஒரு சின்னத்தை வடிவமைத்தோம். அதை ஒப்புதலுக்கு அனுப்பி தற்போது ஒப்புதலும் பெற்றுள்ளோம். இது எங்கள் மாநிலத்துக்கு பெருமை சேர்க்கும் நாள். இந்த சின்னமே எங்கள் மாநிலத்துக்கு ஒரு புத்தாண்டு பரிசு” என கூறி உள்ளார்.