டில்லி

லித் மீதான தாக்குதல்கள் குறித்து பிரதமர் தனது மௌனத்தை கலைக்க வேண்டும் என குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கூறி உள்ளார்.

சமீபத்தில் நடந்த தேர்தலில் குஜராத் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் தலித் இனத் தலைவரான ஜிக்னேஷ் மேவானி.    இவர் மகாராஷ்டிராவில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு பேசிய பின் அங்கு கடும் கலவரம் வெடித்தது.   ஜிக்னேஷ் கலவரத்தை தூண்டியதாகக் கூறி அவர் மீது வழக்கு பதியப் பட்டுள்ளது.   இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களிடம் ஜிக்னேஷ் மேவானி உரையாடி உள்ளார்.

அப்போது, “பிரதமர் மோடி தலித்கள் மீது நடைபெறும் தாக்குதல்களுக்கு பதிலளித்து தனது மௌனத்தை கலைக்க வேண்டும்.   எந்த ஒரு விவகாரத்திலும் அவர் வாய் திறப்பதே கிடையாது.    ஆனால் டிஜிட்டல் இந்தியா,  சந்திரனில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது,  செவ்வாயில் வீடு கட்டுவது போன்றவைகளைப் பற்றி பேசுவார்.   மக்களுக்கிடையே ஒரு சமத்துவம் இல்லாத சமூகத்தை வைத்துக் கொண்டு அவர் இப்படி பேசுவது அவமானத்துக்குறியது.

என்னால் குஜராத் சட்டசபையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 99 ஆகக் குறைந்துள்ளது.   அதனால் என்னை பழிவாங்க ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜ க திட்டமிடுகிறது.   எனது பேச்சுக்கள் எவ்விதத்திலும் கலவரத்தை தூண்டும் வகையில் அமையவில்லை/    நான் மகாராஷ்டிராவில் பிமா கோரேகான் பகுதிக்கு செல்லவும் இல்லை.   என்னப் போல ஒரு புகழ் பெற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவருக்கே இந்த கதி ஏற்படுகின்றது.    அப்படி இருக்க ஏழை தலித் மக்களுக்கு இந்த அரசு இன்னும் எத்தனைக் கொடுமைகளை செய்யும் என்பதை யோசிக்கக் கூட முடியவில்ல்லை.

விரைவில் மாணவர் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின் டில்லியில் ஒரு பேரணை அமைக்கப் பட உள்ளது.   அந்தப் பேரணியில்  நாங்கள் ஒரு கையில் மனு தர்ம புத்தகமும்,  மற்றொரு கையில் இந்திய அரசியல் சட்டப் புத்தகத்தையும் எடுத்துச் செல்ல இருக்கிறோம்.    ஊர்வலமாக பிரதமர் அலுவலகம் சென்று அவர் இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுக்கப் போகிறார் என கேட்க உள்ளொம்” என ஜிக்னேஷ் மேவானி தெரிவித்தார்.