கேப்டவுன்: 

ந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று  கேப் டவுனில்  தொடங்கியது. டாஸ்வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்ததால் இந்தியா பந்துவீச களமிறங்கியது.

தென்னாப்பிரிக்காவுடன் தொடர் போட்டியில்  பும்ரா மற்றும்  ரோகித் இந்திய அணியில் இணைக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் ரகானே போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தென்னாப்பிரிக்கா இடையே தொடர் போட்ட ஆரம்பமானது.

தொடக்கம் முதலே பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா அணியினரை மிரள வைத்தனர் இந்திய பந்துவீச்சாளர்கள்.

பேட்டிங்கை தேர்வு செய்த  தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. ஆனால், இந்திய பந்து வீச்சாளர்  புவனேஷ்வர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடியது. முதல் விக்கெட்டாக  எல்கரை ‘டக்’ அவுட்டாக்கிய புவனேஷ்வர், மார்க்ராமை 5 ரன்னில்  வெளியேற்றினார்.

அதைத்தொடர்ந்து ஆட வந்த ஆம்லாவும் 3 ரன்னில் புவனேஷ்வரிடமே சிக்கி வெளியேறியது பரிதாபமாக இருந்தது.

தனது சொந்த நாட்டிலேயே இந்து பந்துவீச்சாளர்களின் பந்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், 12 ரன்களிலேயே 3 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து டிவிலியர்சுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் டுபிளசி நிதானமாக ஆடி வருகின்றனர்.

தென் ஆப்ரிக்க அணி, முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி வீரர்கள் விவரம்:-

1. தவான், 2. முரளி விஜய், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ரோகித் சர்மா, 6. ஹர்திக் பாண்டியா, 7. சகா, 8. அஸ்வின், 9. பும்ரா, 10. மொகமது ஷமி, 11. புவனேஷ்வர் குமார்.

தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் விவரம்:-

1. டீன் எல்கர், 2. மார்கிராம், 3. அம்லா, 4. டி வில்லியர்ஸ், 5. டு பிளிசிஸ், 6. குயின்டான் டி காக், 7. பிலாண்டர், 8. கேஷப் மகாராஜ், 9. ஸ்டெயின், 10. மோர்னே மோர்கல், 11. ரபாடா.