
சென்னை
போக்குவரத்து தொழிலாளர்கள் சென்னை புறநகரில் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தைகள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில் இது குறித்த பேச்சு வார்த்தையில் ஊழியர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் இறுதி முடிவு ஏற்படவில்லை என தகவல்கள் வந்துள்ளன.
தற்போது சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர் போன்ற இடங்களில் பேருந்துகள் திடீரென நிறுத்தப் பட்டுள்ளன. பேருந்துகளை நிறுத்தி வைத்த போக்கு வரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள்னர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Patrikai.com official YouTube Channel