டில்லி,

ஸ்ரேல் நாட்டு நிறுவனத்திடம் இந்தியாவுக்கு பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இந்தியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இஸ்ரேல் நாட்டில்உள்ள  ‘ரபேல் அட்வான்ஸ் டிபென்ஸ் சிஸ்டம்’ (Rafael Advanced Defence Systems) என்ற நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 1600  ‘ஸ்பைக் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை’களை வாங்குவதற்காக   2014–ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துவிட்டதாக ரபேல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இஷாய் டேவிட் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து,   இந்தியாவின் ராணுவ அமைச்சகத்திடம் இருந்து தங்களுக்க அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது என்றும், இதன் காரணமாக தங்களுக்கு வருத்தம் உண்டு. அதே சமயத்தில், இந்திய ராணுவ அமைச்சகத்துடன்  நாங்கள் எப்போதும் போல் ஒருங்கிணைந்து செயல்படுவோம்’’ என்றும் கூறி உள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ 4 நாள் பயணமாக வருகிற 14–ந் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் இந்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், கடந்த செவ்வாய்க்கிழமை மற்றொரு இஸ்ரேல் நிறுவனத்திடம், 131 பராக் ஏவுகணைகளை 70 மில்லியன் டாலர் மதிப்பில் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் காரணமாகவே ரமேல்நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் சராசரியாக 1 பில்லியன் டாலர் இராணுவ உபகரணங்கள் இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]